நமது ஊா்...!

இணையதள உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருகின்றது...நீங்களும் உறுப்பினராகலாம்.

பயன்பட வாழ்...!

நமது கடமை...!

மக்கள் மன்றம்

அரசுப் பள்ளிகளுக்கும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் தேவையானவற்றை உதவுவதற்காகவும், வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழ்நாட்டினருக்கு இன்னல்கள் ஏற்படும்போது அவர்களின் துயர் துடைப்பதற்காகவும், மலேசியாவில் பணிபுரிந்த நண்பர்களைக் கொண்டு “தமிழர் பண்பாட்டு மனிதநேய மன்றம்” எனும் அமைப்பு 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புருணை, சிங்கப்பூர் என கிளைகளைக் கொண்டு செய்லப்டத் தொடங்கிய இந்த அமைப்பு, காரைக்குடியினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டது."

மேலும் காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் சமுதாயப் பணிகள் செய்யவும், அங்குள்ள பல பிரச்சினைகளைக் கையிலெடுத்து போராட வேண்டியும் இருந்ததால் 2006 முதல், அனைவருக்கும் புரியும் வண்ணம் “காரைக்குடி மக்கள் மன்றம்” எனும் பெயரில் செயல்பட்ட மக்கள் மன்றம், தற்போது பல்வேறு நாடுகளிலும், பல்வேறு ஊர்களிலும் கிளைகளைக் கொண்டு செயல்படுவதால் “தமிழக மக்கள் மன்றம்” எனும் பெயரில் இயங்கிவருகிறது.

இந்த அமைப்பில் பல்வேறு அரசியல் கட்சியினர், பொது இளைஞர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான சமூக ஆர்வலர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

“பயன்பட வாழ்” எனும் வார்த்தையினைத் தங்களின் கோட்பாடாகக் கொண்டு செயல்படும் “மக்கள் மன்றத்தில்” இணையம் வழி (online member) நீங்களும் கட்டணமின்றி உறுப்பினராகலாம்.

 • ஆண்டுதோறும் 250 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகப்பை மற்றும் பள்ளி உபகரணங்களையும், அரசுப்பள்ளிகளுக்குத் தேவையான உதவிகளையும் ஆண்டுதோறும் செய்துவருகிறது
 • ஆதரவற்றோர் இறுதிச்சடங்குகளைச் செய்துவரும் மக்கள் மன்றம், இதுவரை 100க்கும் மேற்பட்ட இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளது
 • தினம்தோறும் இலவச அமரர் ஊர்தி மற்றும் இலவச உடல் குளிர் சாதனப் பெட்டி உதவி
 • தை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டினை, அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை “மதங்களைக் கடந்து தமிழினமாய் ஒன்றுகூடி எல்லோரும் கொண்டாட வேண்டிய ஒரே பண்டிகை இதுவென” உலகுக்குச் சொல்லும்பொருட்டு, ஆண்டுதோறும் இந்து கிறித்தவ முசுலிம் மக்களை ஒன்று கூட்டி பொங்கல் விழாக்கள் நடத்தப்படுகிறது
 • சிறந்த சமூகப் பணியாளர்கள், சிறந்த ஆசிரியர்கள், சிறந்த அரசுப் பணியாளர்களுக்கு விருதளித்து ஊக்கப்படுத்துதல்
 • சாலைகளில் குழிகள் இருப்பின் அதனைச் சரி செய்வது, சாலையோரம் சுத்தம் செய்தல்
 • சாலையோரம் அடிபட்டுக் கிடக்கும் கால்நடைகளை தூக்கிச் சென்று காப்பாற்றுவது
 • விழிப்புணர்ச்சிப் பிரச்சார வாகனம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்ச்சி
 • பண்பாட்டு விழாக்கள் மற்றும் தமிழர் கலைகளைக் காத்தல்
 • தனியார் பள்ளிகள், தனியார் பள்ளி வாகனங்கள், தனியார் பேருந்துகள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பேருந்துகள் என அனைத்திலும் மக்கள் நலனைக் காத்தல்
 • மீத்தேனுக்கு எதிராக, அரசு மருத்துவமனையின் அவலத்திற்கு எதிராக, தனியார் ஆலைக்கு எதிராக, சம்பை ஊற்றினைக் காப்பாற்ற என பல்வேறு சமூக அவலங்களுக்கு எதிராகப் போராட்டங்கள்
 • அரசுப்பள்ளிகளின் தரத்தினை உயரத்தவும், அரசுப் பணியாளர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியிலேயே படிக்க வேண்டும் என்ற சட்டத்தினை இயற்றக் கோரியும் உண்ணாவிரதம்
 • சங்கரபதிக் கோட்டையை வெளிக்கொண்டு வந்து, அதன் சிறப்பினை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றது
 • இரத்ததான முகாம்கள் மற்றும் தினம்தோறும் அவசர ரத்ததான தேவைகளுக்கு உதவி
 • வெளிநாடுகளில் இயற்கை எய்தும் தமிழ்நாட்டினரை தாயகத்திற்கு அனுப்பி வைத்தல் மற்றும் வெளிநாடுகளின் முகாம்களில் பரிதவிக்கும் தமிழ்நாட்டினருக்கு உதவி செய்து தாயகம் அழைத்து வருதல்
 • இளைஞர்கள் நேர்மையான அரசியலுக்கு வரவேண்டியும், நேர்மையான தேர்தல் மற்றும் வாகு விற்பனைக்கு எதிராகவும் பல்வேறு ஊர்களில் ஆர்ப்பாட்டங்கள்
 • ஆதரவற்றோருக்கு மருத்துவ உதவி
 • வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட ஊர்களில் உதவி மற்றும் புதிய குடிசை வீடுகள்
 • குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயரிடும் பெற்றோருக்கு ஊக்கப் பரிசு மற்றும் மருத்துவமனைகளில் தூய தமிழ்ப் பெயர்களின் பட்டியல்
 • அரசுப் பள்ளிகளில் தற்காப்புக் கலை பயிற்சிகள்

 • இதுபோன்ற எண்ணிலடங்காப் பணிகளைச் செய்து வருகின்றனர்.

  "ஒருமுறைதான் இந்த வாழ்க்கையே இதை
  ஊருக்குப் பொதுவாக்கு
  தனக்கென வாழா மனிதராய்
  புது சரித்திரம் உருவாக்கு
  மானிடா ஏய் மானிடா
  நீ மரணத்தை வென்றிடலாம்
  நன்றி!"